தரம் 5 புலமைப்பரீட்சை முடிவுகளின்படி வவுனியா நொச்சிமோட்டை க.உ. வித்தியாலயத்தில் சுரேஷ்காந்தன் துபாரகன் 157 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இவர் மிகவும் வறுமையிலும் மின்சார வசதிகள் அற்ற நிலையிலும் இந்த சாதனையைப் பெற்றுள்ளார்.
இதற்கு உதவியாக இருந்த மாணவரின் பெற்றோர், கற்பித்த ஆசிரியை திருமதி.குகதாசன் ஜீவராணி, பாடசாலை அதிபர் ஆகியோரை பாடசாலை சமூகம் வாழ்த்தி நிற்கின்றது.
மேலும் இவ் மாணவன் சாதனைக்கு உழைத்த அனைத்து உள்ளங்களுக்காகவும் பாடசாலைச் சமூகம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.
இவருக்கு எமது வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துகொள்கின்றோம்.