பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத் தேர்வு வவுனியா காமினி வித்தியாலயத்தில் இன்று(11.10.2015) இடம்பெற்றது.
இதில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 424 தமிழ் இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பொலிஸ்மா அதிபர் ஈ.எம்.எம்.ஏக்கநாயக்கா, வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த விக்கிரமசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஆட்சேர்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் நடைபெறுகின்றது.
5.5 அடி உயரத்தைக் கொண்ட தேக ஆரோக்கியம் மிக்கவர்கள் இதில் உள்வாங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை, யாழில் நேற்று நடைபெற்ற நேர்முகத் தேர்வில் 650 இளைஞர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.