வடக்கு, கிழக்கு ரயில் சேவைகளின் நேர அட்டவனை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு,மட்டக்களப்பு மற்றும் தலைமன்னார் மார்க்கங்களில் சேவையில் ஈடுபடும் ரயில்களின் நேர அட்டவனையே மாற்றும் செய்யப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்தார்.
வடக்கு ரயில் மார்க்கத்திலான கொழும்பு – காங்கேசன் துறை மற்றும் கொழும்பு – தலைமன்னார் ரயில் சேவைகளின் நேர அட்டவனையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கிழக்கு ரயில் மார்க்கத்தில் ஈடுபடும் கொழும்பு – திருகோணமலை மற்றும் கொழும்பு – மட்டக்களப்பு ஆகிய ரயில் சேவைகளின் நேர அட்டவனையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க சுட்டிக்காட்டினார்.இந்த நேர அட்டவணை இன்று முதல் அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.