வழக்கு விசாரணை ஒன்றுக்காக ஆஜராகத் தவறியமை காரணமாக, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஎத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவரை கைதுசெய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புனித குரானுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை மற்றும் ஜாதிக பலசேன அமைப்பின் ஊடகவிலயாளர் சந்திப்பில் அத்துமீறி நுழைந்து சர்சையை ஏற்படுத்தியமை உள்ளிட்ட விடயங்களில் இவர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.
குறித்த விடயங்கள் தொடர்பில் தொடரப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதன்போது குறித்த மூவரும் ஆஜராகத் தவறியமையால் இவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கு விசாரணைகள் நவம்பர் 9ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.