ஹொரணை – அகுருவாதோட பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.நேற்று காலை தனது வீட்டுக்கு அருகில் உள்ள மரமொன்றில் அவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
சம்பவத்தில் 9 வயதான சிறுவன் ஒருவரே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் குறித்த மாணவனின் மரணம் குறித்து சந்தேகம் நிலவுவதாகவும் அதனால் சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக பாணந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அகுருவாதோட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.