இலங்கையில் வெற்றிடமாக உள்ள சிறைச்சாலை அலுகோசு பதவிக்கு புதிய ஒருவரை நியமிப்பதற்கான நேர்முகப்பரீட்சை, நாளை செவ்வாய்க்கிழமை (13) நடைபெறும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் ரோஹண புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
வெற்றிடங்களுக்கு 2 பேர் தெரிவு செய்வதற்கான பயற்சிகள் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக பயற்சியை நிறைவு செய்த 2 பேர் கடமையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது வரையில் அலுக்கோசு பதவிக்கு எவரும் இல்லாத நிலையில் நாளைய நேர்முகத் தேர்வு மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.