அடுத்த ஜென்மத்தில் உன் மகளாக பிறக்க வேண்டும். பிரபல நடிகரிடம் தெரிவித்த ஆச்சி மனோரமா!!

901

manorama004ஆச்சி மனோரமாவின் இழப்பு தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிற்கே வருத்தம் தான். இவரின் இறுதி சடங்கில் கலைஞர், ஜெயலலிதா, ரஜினி, கமல், அஜித், விஜய், என அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துக்கொண்டனர் ..இந்நிலையில் நடிகர்+இயக்குனர் பார்த்திபன் கூறுகையில், ‘சினிமா இருக்கும் வரை மனோரமாவின் புகழ் இருந்து கொண்டிருக்கும்.

நாடக நடிகர், திரைப்பட நடிகர், நடிகைகள் என யார் இறந்தாலும் முதல் ஆளாக வந்து நின்றவர் மனோரமா. அவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் என் படமான புதிய பாதைக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. நான் பிள்ளைகளை வளர்க்கும் முறையை பார்த்து என்னை பாராட்டினார். அடுத்த ஜென்மத்தில் நான் உனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்று என்னிடம் தெரிவித்தார்’ என மிக நெகிழ்ச்சியாக கூறினார்.