அதிக காரம் சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா??

1513

925af0f5-0762-4949-8a53-f7239311be0d_S_secvpfசிலருக்கு உணவுகள் காரமாக இருந்தால் தான் பிடிக்கும். அதனால் உணவுகளில் மிளகாயை அதிகம் சேர்ப்பார்கள். குறிப்பாக உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவில் மிளகாயை சேர்த்து உட்கொண்டால், உடல் எடை விரைவில் குறைக்கலாம். இதுப்போன்று ஏராளமான நன்மைகள் காரமான உணவுகளை உட்கொள்வதால் கிடைக்கும்.

யார் ஒருவர் உணவில் காரத்தை அதிகம் சேர்த்துக் கொள்கிறாரோ, அவரது உடலில் தேவையற்ற கொழுப்புக்கள் சேராமல் இருக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், உணவில் மிளகாயை அதிகம் சேர்ப்பதால், அதில் உள்ள காப்சைசின் என்னும் பொருள் உடலின் வெப்பத்தை அதிகரித்து, அதிகப்படியான அளவில் கலோரிகள் எரிக்கப்பட்டு, அதனால் உடல் எடை குறையும் வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

மிளகாயை உணவில் சேர்ப்பதன் மூலம், இரத்தத்தில் கொழுப்புக்களின் அளவு அதிகமாவதைத் தடுக்கலாம். காரமான உணவுகள் நல்ல மனநிலையை உணர வைக்கும் செரடோனின் என்னும் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து, கோபத்தைக் குறைத்து, மனநிலையை அமைதியாக்கி மேம்படுத்தும். மிளகாயை உணவில் சேர்ப்பதால், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் மிளகாய் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்வதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.