ஹொரணை – அகுருவாதோட பிரதேசத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 9 வயதுடைய மாணவனின் சகோதரியும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் இதேபோன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
மேலும் தனது மகனின் மரணம் தொடர்பில் தனக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக உயிரிழந்த மாணவனின் தந்தை அகுருவாதோட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.