தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சிறுவன் : பல சோம்பேறிகளுக்கு முன்னுதாரணம்!!

491

2397-student-special-needs-passes-scholarship-exam2000661697

அம்பலாங்கொடையைச் சேர்ந்த சிறப்புத்தேவையுடைய சிறுவனொருவன் 167 புள்ளிகளைப் பெற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.

அம்பலாங்கொடை பெலிகொட பிரதேசத்தைச் சேர்ந்த தினுஜ நிம்சர அபேவிக்கிரம என்ற மாணவனே இவ்வாறு பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.

மிகுந்த தன்னம்பிக்கையுடன் பரீட்சைக்கு முகங்கொடுத்ததாகவும், பரீட்சையில் சித்திபெற்று அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என எண்ணியதாக அம்மாணவன் தெரிவித்துள்ளார்.



பிறக்கும் போதே இரண்டு கைகைகளும் ஒழுங்காக செயற்படாத போதிலும் தனது விடா முயற்சியால் பரீட்சையில் சாதித்துக்காட்டிய இம்மாணவனை நாமும் வாழ்த்துவோம்.