போதைப்பழக்கத்துக்கு ஈடான பாதிப்பை ஏற்படுத்தும் வீடியோ கேம்கள்: நிபுணர்கள் எச்சரிக்கை!

454

6a161bc3-2499-49de-b6c0-a1e00be7b89c_S_secvpfஹன்டி கிரஷ் போன்ற வீடியோ கேம்களும் போதைப்பழக்கத்துக்கு ஈடான பாதிப்பை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து கேம் விளையாடுவது, இணையத்தில் ஆபாச படங்களைப் பார்ப்பது போன்றவை குடிபோதை, போதை மருந்து அல்லது சூதாட்டம் ஆகியவற்றைப் போல ஒருவித மனநோயாக மாறலாம் என உளவியல் தொடர்பான புத்தகங்களை எழுதி வெளியிட்டு வரும் எழுத்தாளர் லூசி பெரெஸ்போர்டு என்கிற உளவியல் நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பழக்கங்களுக்கு அடிமையாகிப் போனவர்களை அந்த பாதிப்பிலிருந்து காப்பாற்ற தனிப்பட்ட மருத்துவமனையின் உளவியல் துறையில் அனுமதிக்கப்படுவதைப் போல, இங்கிலாந்தில் தற்போது நூறு நோயாளிகள் டிஜிட்டல் சாதனங்களின் அடிமைத்தனத்தைப் போக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நூறு பேரில், அதிகபட்சமாக முப்பத்தொன்பது பேர் ஆபாச படங்களுக்கு தீவிரமான அடிமையானதால் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது