புனேயில் 14 நாட்களாக நடந்த இந்தியா-இலங்கை கூட்டு ராணுவ பயிற்சி நிறைவு!!

504

129b4416-1e10-40c8-ae2f-36f0156c39fc_S_secvpfஇந்தியா-இலங்கை கூட்டு ராணுவ பயிற்சி மராட்டிய மாநிலம் புனேயில் கடந்த 14 நாட்களாக நடந்துவந்தது. இதில் எல்லைக்கு அப்பால் உள்ள தீவிரவாதங்களை புரிந்து கொள்ளுதல், கூட்டு போர் தந்திரங்கள் உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்த கூட்டு பயிற்சி நேற்று நிறைவுபெற்றது.

இதையொட்டி இந்திய ராணுவ கமாண்டர் ஆசிஷ்குமார் தலைமையில் நடந்த அணிவகுப்பை, ராணுவ பிரிகேடியர்கள் தபான் லால்ஷா (இந்தியா), அருணா ஜெயசேகரா (இலங்கை) ஆகியோர் பார்வையிட்டனர். முன்னதாக அறிக்கை வழங்கிய ஆசிஷ்குமார், நிகழ்ச்சிகளை தொடங்க இலங்கை ராணுவ பிரிகேடியரிடம் சுத்தமான சிங்களத்தில் அனுமதி கேட்டார். இதைப் பார்த்த இலங்கை ராணுவ அதிகாரியும், வீரர்களும் ஆச்சரியமடைந்தனர்.