இந்தியாவிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தவிருந்த போதைப்பொருள் பிடிபட்டது!!

405

14_drugs_g_wராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள ரோஜ்மாநகர் கடற்கரைப் பகுதியிலிருந்து படகில் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த மூன்றரை கிலோ எடை கொண்ட போதைப்பொருள் பிடிபட்டது.

பதுக்கி வைத்திருந்த சதீஸ் மற்றும் திரீஸ்டன் ஆகிய இரண்டு பேரை கைது செய்து இந்திய பாதுகாப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கீழக்கரை டி.எஸ்.பி. மகேஸ்வரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவர் தலைமையிலான பொலிஸ் குழுவினர், சாயல்குடி அருகே உள்ள ரோஜ்மாநகர் மீனவ கிராமத்தில் சதீஸ் மற்றும் திரீஸ்டன் ஆகியோருடைய வீட்டை சோதனையிட்டதில் அங்கிருந்து மூன்றரை கிலோ எடையுள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

போதைப்பொருள் குறித்த வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டு, படகின் மூலம் இலங்கைக்கு கடத்தவிருந்தமை பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. இதையடுத்து, போதைப் பொருளை பறிமுதல் செய்த பொலிஸார், இருவரையும் கைது செய்துள்ளனர்.



மேலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள இந்த போதைப்பொருள் பிரவுன் சுகராக இருக்கலாம் என சந்தேகித்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரும் பாதுகாப்புப் பிரிவினரும் சாயல்குடி பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.