வவுனியா குளத்தில் நன்னீர் மீன்குஞ்சுகளை வைப்பிலிட்டார் வடக்கு மீன்பிடி அமைச்சர்!!(படங்கள்)

579

நன்னீர் மீன்பிடியாளர்களை ஊக்குவிக்கும் செயல்த்திட்டத்தின் கீழ் வவுனியா குளத்தில் நன்னீர் மீன்குஞ்சுகளை வடக்கு மீன்பிடி அமைச்சர் வைப்பிலிட்டுள்ளார்.

வடக்குமாகாணத்தில் உள்ள நன்னீர் மீன்பிடி சங்கங்களை வாழ்வாதாரத்தில் ஊக்குவிக்கும் திட்டத்திற்கு அமைவாக, ஏற்கனவே மாகாணத்தில் உள்ள பல நன்னீர் மீன்பிடி சங்கங்களுக்கு அவர்களது குளங்களில் நன்னீர் மீன்குஞ்சுகளை வைப்பிலிட்டுக்கொடுக்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே,

அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள வவுனியா குளத்தில் சுமார் 75,000 நன்னீர் மீன்குஞ்சுகளை வைப்பிலிடும் நிகழ்வு நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் எம்.பி.நடராஜா, அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் மற்றும் அந்த குளத்தை சார்ந்த மீனவ சங்கங்கள் என்பன கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



1 2 3 4 5 6