வடக்கில் கண்ணி வெடி அகற்றும் மனிதாபிமானப் பணிகளுக்காக சுமார் 108 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது குறித்த ஒப்பந்தம் இன்று இலங்கையின் ஜப்பானுக்கான தூதரகத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் கன்னி வெடி அகற்றும் பணிகளுக்காக 2003ம் ஆண்டு முதல் 27.7 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.