இணையத்தில் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க கோரி நாடு முழுவதும் போராட்டம்!!

580

1141736659Pharmacyஇணையதளம் மூலம் மருந்து பொருட்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க கோரி இந்தியா முழுவதும் மருந்துக் கடை உரிமையாளர்கள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் 8 லட்சம் மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதுடன் 40 லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை உணர்த்தும் வகையில் மருந்து பொருட்கள் இணையதளம் மூலம் விற்பனை செய்வதை தடுக்க கோரி இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் இன்று மருந்து கடைகள் மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மட்டும் சுமார் 40,000 மருந்து கடைகள் இன்று மூடப்பட்டிருக்கும் என தமிழ்நாடு மருந்து விற்பனையாளர் சங்க நிர்வாகம் கூறியுள்ளது. எனினும் மருந்து கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தாலும், பொது மக்கள் மருந்து கேட்டால் கடையை திறந்து அதனை விநியோகிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இணையதளம் மூலம் மருந்து பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் போதை மருந்துகள் மற்றும் கலாவதியான மருந்துகளின் நடமாட்டம் அதிகரிக்கும் ஆபத்து இருக்கும் என கூறப்படுகிறது.

இதனால் இணைய வணிகத்தை கண்டித்து இன்று நள்ளிரவு 12 மணி வரை இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கிறது.