வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உடலில் தீ மூட்டிக்கொண்டு பாதையில் ஓடிய இளைஞர்!!

1010

619283342305234பாகிஸ்தானில் வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நபர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்டு பாதையில் ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் முல்தான் நகரைச் சேர்ந்த 24 வயதடைய ஷஹ்பாஸ் அஹ்மட் என்பவரே இவ்வாறு தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு பாதையில் ஓடியுள்ளார்.

பாகிஸ்தான் அரசாங்கத்தினால் விதிக்கப்படும் வரிகளினால் அதனைக் கட்ட முடியாமல் கஷ்டப்படுவதனால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக அவர் இந்த விபரீத எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

கடும் எரிகாயங்களுக்குள்ளாகி உடலில் 80 சதவீதமான பகுதி எரிந்துள்ளதனால் அவரின் உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்வழியாகச் சென்றவர்கள் உடலில் தீமுட்டிக்கொண்டு பாதையில் ஓடிய அவரை கண்டு உடலில் பரவிய தீயை மண்ணைத் தூவி அணைத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.