வெளிநாடுகளில் 559 இலங்கையர்கள் உயிரிழப்பு!!

442

1இலங்கையர்கள் 599 பேர் கடந்த ஆண்டு வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அறிவித்துள்ளது.

இதில் 103 பேர் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக 12 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

31 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதோடு 386 பேர் நோய்கள் காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் 2014 ஆம் ஆண்டின் செயற்பாட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு வெளிநாடுகளில் தொழில் செய்யும் போது உயிரிழந்த இலங்கையர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு நஷ்ட ஈடு பெற்றுக் கொடுப்பதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.



வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு நியாயமான சம்பளங்கள், கொடுப்பனவுகள் கிடைக்காமையால் நெருக்கடிகளை சந்தித்துள்ளோருக்கு அவற்றை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.