பிரேசில் கடற்கரையில் ஆயிரக்கணக்கான இறந்த மாடுகள்!!

652

9668045Cowபிரேசிலில் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மாடுகள் இறந்த நிலையில் கரையொதுஙகி இருப்பதால், துர்நாற்றம் வீசி அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேசிலில், லெபனான் கப்பல் ஒன்று கடந்த வாரம் ஐந்தாயிரம் மாடுகள் மற்றும் 750 டன் எண்ணெய்யுடன் பாரா பகுதிக்கு வந்தது. விபத்தில் சிக்கிய இந்தக் கப்பல், கடலில் மூழ்கியதால், கப்பலில் இருந்த ஆயிரக்கணக்கான மாடுகள் உயிரிழந்து கரை ஒதுங்கின.

தொன்கணக்கில் எண்ணெய் கடலில் கலந்துள்ளதால், கடல் உயிரினங்கள் மட்டுமில்லாமல், அப்பகுதி மீனவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இறந்த மாடுகள் கரைஒதுங்கி துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளகியுள்ளனர். கப்பல் மூழ்கியது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.