தந்தை இறந்த மனஉளைச்சலால் மகள் தற்கொலை : யாழில் சம்பவம்!!

440

1 (40)தந்தையார் இறந்ததையடுத்து மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருந்த மகளொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று உடுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் உடுவில் தெற்கு சத்தியபுரத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான 33 வயதுடைய கிருபாகரமூர்த்தி ராஜநந்தினி ஆவார்.

குறித்த பெண்ணின் சடலம் வீட்டில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

நீதிமன்றத்தின் பணிப்புரைக்கு அமைவாக யாழ்.போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம் குமாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.