வடமாகண கல்வித்திணைக்களமும், சுகாதாரதிணைக்கமும் ,வவுனியா நகரசபையின் அனுசரணை யோடு நடாத்திய உளநல தின நிகழ்ச்சிகள் நகரசபை மண்டபத்தில் மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தலைமையில்இன்று(15.10.2015) நடைபெற்றது.இந் நிகழ்வரிற்கு பிரதம அதிதியாக. கௌரவ சுகாதா அமைச்சர் P.சத்தியலிங்கம் கலந்துகொண்டுடிருந்தார்.
தலைமையுரையினைமுத்து இராதாககிருஸ்ணன் நிகழ்த்தினார் வரவேற்புரையினை வவுனியா பொதுவைத்தியசாலையின் உளநல வைத்தியர் S.சுதாகரன் நிகழ்த்தினார் அதனைத்தொடர்ந்து உளவழத்துணை ஆசிரியர்களால் சீர்மிய கீதம் இசைக்கப்பட்டது.
ஆசியுரையினை கல்வி,பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறையின் செயலாளர் இ.இரவீந்திரன் நிகழ்த்தினார்.மேலும் இந்நிகழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பற்றிய பார்வையைச் செலுத்தினால், இறம்பபைக்குளம் மகளீர் கல்லூரிமாணவிகளும் தமிழ் மத்திய மாகாவித்தியாலய மாணவர்களும் இணைந்து நிகழ்த்திய பட்டிமன்றம் -(சினிமாசமூகத்தைசீர்படுத்துகிது-சீர்டுத்தவில்லை)என்ற வாதப்பிரதி வாங்கள் சமூகச்சீர்கேடுகளைதடுக்க என்னசெய்யலாம்?எது நல்ல சினிமா? என்பது பற்றி மாணவர்களை சிந்திக்கத்தூண்டியிருக்கும். யா/மல்லாகம் மகாவித்தியா மாணவி செல்வி.வைசா நடித்த. தொழில்நுட்பத்தின் கையில் வாழ்க்கை என்னும் ஓராள் அரங்கஆற்றுகை முகநூல்பாவனையின் அவலங்கள் பற்றிப்பேசிது, செட்டிக்குளம் மமகா வித்தியாலமாணவ,மாணவிகள் இணைந்து நடித்த ‘திறமைக்கு கைகொடுப்பகோம் ‘என்னும் நாடகம் பெற்றேர்கள் பிள்ளைகள் மீது கல்வியை திணிப்பதால் ஏற்படும் எதிர்வினைகளை நகைச்சுவையாக வெளிப்படுத்தியிருந்தனர்,
குணநாயகம் மகிழ்ச்சிகரன் இயக்கத்தில் வெளியான. வாழ்வைத்தேடி,தவிப்பு,அமைதி இக்நேசியஸ் இயக்கத்தில் உருவான அசப்பு ஆகிய குறும்படங்கள். சமகால பிரச்சினைபற்றிப்பேசி சிந்திக்கவைக்கின்றன.இவ்வாறு இவைஒருபரிமாணத்தை காட்டிநிற்க வவுனியா வறோட்நிறுவனம்,முல்லைத்தீவு இனியஇல்ல மாற்றுத்திறநாளிகளின் கலை நிகழ்ச்சிகளை அனைவரும் கண்டு வியந்து நின்றனர். ஒரு அரங்கில் குறும்படம்,நூல்வெளியீடு,கலைநிகழ்ச்சிகள்,உரைகள் என பல்துறை அம்சங்களையும் கண்டு இன்புற்றிருந்த நிறைவுடன், மீண்டும் சந்திப்போம்.
படங்கள் :தம்பிப்பிள்ளை சுதன்