மனைவியை கத்திரிகோலால் குத்தி கொன்றவருக்கு சிறை – ஒருவர் அடித்துக் கொலை!!

1096

gavelஇரத்தினபுரி – கரன்கோட பிரதேசத்தில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபரின் சகோதரரே அவரைக் கொன்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

போதையில் இடம்பெற்ற மோதலே கொலைக்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் 30 வயதான ஒருவரே பலியாகியுள்ளதோடு, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, மனைவியை கத்திரிக்கோலினால் குத்திக் கொலை செய்த கணவருக்கு 16 வருடங்கள் கடுழிய சிறைத்தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். யாழ். கைதடி பகுதியைச் சேர்ந்த வாகீசன் தர்சினி (வயது 33) என்ற குடும்ப பெண்னே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ம் திகதி குடும்ப தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து சந்தேகநபருக்கு எதிரான வழக்கு கடந்த 2013ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12ம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் யாழ். மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.



இந்த வழக்கு விசாரணை கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று புதன்கிழமை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் குற்றவாளிக்கு 16 வருடங்கள் கடுழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்ததுடன், 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் கட்ட உத்தரவிட்டார்.

தண்டப்பணம் செலுத்த தவறின் 3 மாத சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.