ஓடும் ரயிலில் குழந்தை பெற்றெடுத்த தாய்!!

1380

newborn-train-toilet-1மும்பையில் ஓடும் ரயிலில் தாயொருவர் அழகிய குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார். மும்பை கல்யாண் பகுதியில் நிறைமாதக் கர்ப்பிணி மனைவியை பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு ரயிலில் சென்றுள்ளார் ராம்லால் பால் என்பவர்.

ஆனால், புகையிரதம் புறப்பட்ட சில நேரத்திலேயே அப்பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டு அழகான குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். பின்னர் உடனடியாக அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி மருத்துவக் குழுவொன்றை புகையிரத நிலையத்திற்கு வரவழைத்து முதலுதவிகள் வழங்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் பிரசவ வலியால் துடித்த போது அவருக்கு உதவி செய்யாமல் ரயில் பயணித்த மற்ற பயணிகள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்துள்ளனர். தற்போது குறித்த தாயஞம் குழந்தையும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், இருவரும் நலமாக இருப்பதாகவும் பெண்ணின் கணவர் ராம்லால் பால் தெரிவித்துள்ளார்.