கையடக்கத்தொலைபேசியொன்றையும் அதற்கான இரு மின்னேற்றி உப கரணங்களை யும் (சார்ஜர்) விழுங்கிக் கடத்த முயன்ற கைதியொருவர் வசமாக அதிகாரிகளிடம் சிக்கிய சம்பவம் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.
மாலை வேளையொன்றில் சிறைச்சாலையிலிருந்து வெளியில் செல்வ தற்கு அனுமதிக் கப்பட்டதையடுத்து, மேற்படி கைதி கையடக்கத் தொலைபேசியையும் உபகரணங்களையும் விழுங்கி சிறைச்சாலைக்குள் கடத்த முயற்சித்துள்ளார்.
இந்நிலையில் அந்நாட்டுத் தலைநகர் பிரேசிலியாவில் பபுடா சிறைச்சாலை யிலுள்ள எக்ஸ்ரே ஊடுகாட்டும் கருவியை அவர் கடந்து சென்ற போது, அவரது வயிற்றில் கையடக்கத்தொலை பேசிகளும் ஏனைய உபகரணங்களும் இருப்பது அம்பல மாகியுள்ளது.