வீடியோவை ஊடகமாகப் பயன்படுத்தி பின்தங்கிய மக்களின் கதைகளை வெளிஉலகிற்கு எடுத்துக்கூறி, அச் சமூகத்தினை வலுப்படுத்தும் உத்திமுறை உலகம் முழுவதிலும் அதிகம் பயன்படுகின்றது.
இத்தகைய கதைகூறல் மூலம் இளம் வீடியோ தயாரிப்பாளர்களும் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களும் ஒன்றாக இணைந்து சமூகப் பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றை குறுந்திரைக் கதைகளாக உருவாக்கலாம்.
வீடியோ மூலும் கதைகூறும் இத்தகையமுறை, மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இதன் மூலம் மக்கள் தமது அபிவிருத்திசார் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதற்கு தீர்வினையும் காணமுடிவதுடன் தமதுகதைகளை எடுத்துக் கூறவும் முடிகின்றது.
இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர்கள் மன்றம் இத்தகைய மூன்று செயற்றிட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் இரண்டு செயற்றிட்டங்கள் மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களில் அமுல்படுத்தவுள்ளன.
மூன்றாவதுதிட்டம் பல்கலைக்கழகங்கள், சமூகசேவை நிறுவனங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் நலன்கருதி நாடுதழுவிய ரீதியில் இடம்பெறவுள்ளது.
இத்திட்டங்களின் நோக்கம் இளைஞர்களிடம் உள்ள வீடியோ மூலம் கதைசொல்லும் திறணைஊக்குவித்து, பின்தங்கிய கிராமங்களில் மக்கள் எதிர்கொள்ளும் அபிவிருத்திசார் பிரச்சினைகளை அடையாளப்படுத்துவதாகும்.
18-25 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். சகல செயற்றிட்டங்களிலும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயிற்றுவிப்பாளர்களிடம் பயிற்சிபெறும் வாய்ப்பு உள்ளது. பயிற்சிமுடிவில் பங்குபற்றும் சகலரும் வீடியோ மூலம் கதைகளைஉருவாக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பர். இப் பயிற்சிநெறியின் இறுதியில் சான்றிதழ்களும்வழங்ப்படும்.
மூன்றுசெயற்றிட்டங்களும் இலவசமாக இடம்பெறஉள்ளதால் குறித்ததொகையினர் மாத்திரமே தெரிவுசெய்யப்படுவர்.
கண்டி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடம்பெறவுள்ள இரண்டு செயற்றிட்டங்களில் அப்பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு அதிகமுனுரிமை வழங்கப்படும். அத்தோடு, நாடுதழுவிய ரீதியில் இடம்பெறவுள்ள செயற்றிட்டத்தில் இளம்பட்டதாரி, பல்கலைக்கழக, தனியார் ஊடகமற்றும் தொழிநுட்ப மாணவர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள், இளம் வீடியோ ஆர்வலர்கள் போன்றோர் பங்குபற்றலாம்.
விண்ணப்பமுடிவுத்திகதி : 15.11.2015
ஆர்வமுள்ள இளைஞர் யுவதிகள் [email protected] மின்னஞ்சல் மூலம் விண்ணப்பங்களைஅணுப்பிவைக்கலாம்.
தபால் மூலம் விண்ணப்பிக்கவிரும்புவோர்
இலங்கை அபிவிருத்திக்கான ஊடக நிலையம்,
இல. 249, 2/1, நாவலவீதி, ராஜகிரிய
எனும் முகவரிக்குவிண்ணப்பங்களைஅனுப்பலாம்.
தொடர்புகளுக்கு : 0117209511 மற்றும் 0776653694 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்