முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று (15.10.2015) ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவின்கீழ் காரிப்பட்ட முறிப்புக்கும் மணவாளன்பட்ட முறிப்புக்கும் இடையில் ஒட்டுசுட்டான் பிரதான வீதியின் இரு மருங்கிலும் பனை அபிவிருத்திச் சபையினால் 9500 பனம் விதைகள் நடுகைசெய்யப்பட்டன.
இந்நிகழ்வு பனை அபிவிருத்திச் சபையின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் பா.றஜிபரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மணவாளன்பட்டமுறிப்பு கிராம அலுவலர் த.தனபால்ராஜ், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கடந்த 2015.10.06, 07, 08 ஆம் திகதிகளில் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 13000 பனம் விதைகளும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 16000 பனம் விதைகளும் நடுகை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.