வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அனுசரணையுடன் இயங்கும் அருளகம் சிறுவர் இல்லம் மற்றும் சிவன் முதியோர் இல்லம் என்பவற்றின் சிறுவர் முதியோர் தின விழா இன்று 16.10.2015 வெள்ளிகிழமையன்று பிற்பகல் 3.30 மணியளவில் எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள சிவன் முதியோர் இல்லத்தின் உள்ளக கலையரங்கில் இடம்பெற்றது .
மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ ப.சத்தியலிங்கம் அவர்கள்(வடமாகாண சுகாதார அமைச்சர்)கௌரவ விருந்தினராக திரு .ஜி.ரி.லிங்கநாதன்(வடமாகாண சபை உறுப்பினர்)சிறப்பு விருந்தினர்களாக திரு.கா. உதயராசா அவர்கள்(பிரதேச செயலாளர் வவுனியா) திரு .க.பரந்தாமன் அவர்கள்(பிரதேச செயலாளர் வவுனியா வடக்கு)DR.S.சிவதாஸ் அவர்கள்(மனநல சிகிச்சை பிரிவு பொது வைத்தியசாலை வவுனியா)திரு.திருமதி.சியாமலி திசாநாயக்க அவர்கள்(பொலிஸ் பொறுப்பதிகாரி-சிறுவர் பெண்கள் பிரிவு) மற்றும் வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்களான சூரியகுமார், சுதாகரன் வவுனியா இறம்பை ககுளம் மற்றும் சமணங்குளம் கிராமசேவகர்கள் அத்தோடு வவுனியாவில் பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் ஆலயங்கள் பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட அருளகம் சிறார்கள் மற்றும் ஊழியர்கள் சிவன் முதியோர் இல்ல ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் மற்றும் வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் நிர்வாகத்தினர் என பல்வேறு பட்ட தரப்பை சேர்ந்த வர்களும் கலந்து கொண்டனர் .
மேற்படி நிகழ்வின் போது அதிதிகள் மங்கள வாத்தியங்களுடன் வரவேற்க்கப்பட்டு மங்கல விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமாகியது .அருளகம் சிறுவர் இல்லத்தை சேர்ந்த யாழ்ப்பான பல்கலைக்கழக மருத்துவபீட நான்காம் வருட மாணவன் நாகதீசன் வரவேற்புரையை வழங்கினார் .
தொடர்ந்து கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் திரு .ஜீ .ரி .லிங்கநாதன் அவர்கள் உரை நிகழத்தினார். அவர் தனதுரையில் அருளகம் சிறுவர் இல்லம் மற்றும் சிவன்முதியோர் இல்லங்கள் ஆரம்பிக்கபட்டு போரின் தாக்கத்தினால் நிர்கதியான சிறார்கள் மற்றும் முதியவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சிய உண்டு பண்ணுகின்ற அளப்பெரிய சேவையை வழங்குவதாக குறிப்பிட்டார் . மேலும் வடமாகாண சபை உறுப்பினராக பதவியேற்ற பின் தன்னால் மேற்கொள்ளபட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் பொதுமக்கள் மத்தியில் விளக்கினார் .
தொடர்ந்து உரை நிகழ்த்திய வடமாகாண சுகாதார மற்றும் சுதேச பெண்கள் விவகாரம் சிறுவர் நன்னடத்தை என்பவற்றுக்கு பொறுப்பான அமைச்சர் திரு .ப.சத்தியலிங்கம் அவர்கள் எமது சமூக அமைப்பு ஒவ்வாதவை இந்த சிறுவர் காப்பகங்கள் இருந்தாலும் காலத்தின் தேவை மற்றும் போரின் பிடியில் நிர்கதியான சிறார்கள் மற்றும் முதியவர்களை பேணுவதற்கு எமக்கும் வேறெந்த தெரிவுகளும் அற்ற நிலையில் நாம் இப்படியான காப்பகங்களை தொடர்ந்தும் நடாத்தி செல்லவேண்டிய நிலையில் தான் உள்ளோம் என குறிப்பிட்டார் . அத்துடன் வன்னியில் அருளகம் சிறுவர் இல்லம் மற்றும் சிவன் முதியோர் இல்லம் என்பவறின் சேவைகள் மகத்தானவை எனவும் அருளகம் போன்ற சிறார் இல்லங்களில் இருந்து வெளிவரும் ஒவ்வொரு சிறார்களின் எதிர்காலம் ஒளிமயமானதாக அமைய வேண்டும் எனவும் அதற்க்கு வடமாகாணத்தில் புதிய திட்டங்கள் வகுக்கபடும் எனவும் குறிப்பிட்டார் .
தொடர்ந்து சிறுவர் முதியோர் தினத்தையொட்டி இடபெர்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றியீட்டிய சிறுவர் சிறுமியார் மற்றும் முதியவர்கள் மற்றும் ஊழியர்களுக்காண பரிசளிப்பு வைபவமும் இடம்பெற்றதோடு அருளகம் சிறார்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
வவுனியா நெற் அலுவலக செய்தியாளர்