ரயிலில் பிச்சை எடுக்க தடை !!

874

540850423_7167e677a6ரயில்களில் பிச்சை எடுப்பதற்கு நவம்பர் மாதம் 01ம் திகதியிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களம் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளது.

ரயிலில் பிச்சை எடுத்தல் மற்றும் வழிப்பறி கொள்ளையர்களினால் பயணிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த தடையை மீறி ரயிலில் பிச்சை எடுக்கும் நபர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.