தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த பிரச்சினைக்கு தீர்வொன்றை எதிர்வரும் நவம்பர் மாதம் 07ம் திகதிக்கு முன்னர் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இடம்பெற்று வரும் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்ற நிலையில், இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.





