4 வயது பிள்ளை சாட்சியமளித்ததால் தாய்க்கும் மகனுக்கும் மரண தண்டனை!!

501

gavelபெண் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக தாயொருவருக்கும் மகனுக்கும் மரண தண்டனை விதித்து கண்டி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் கணவனின் தாய் ஆகிய இருவருக்குமே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு மாத்தளை, ரத்தொட்டை பிரதேசத்தில் 30 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதங்கள் மற்றும் தடிகளால் தாக்கி கொலை செய்யப்பட்டிருந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணைகள் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் கணவரின் தாய்க்கு எதிராக கண்டி உயர் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணைகளுக்காக 4 வயதுடைய பிள்ளையின் வாக்குமூலம் பிரதான சாட்சியாக காணப்பட்டது. குறித்த பெண் இறக்கும் போது அந்தப் பிள்ளைக்கு 4 வயது என்று தெரிவிக்கப்படுகிறது.

பிரதிவாதிகளின் குற்றங்கள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் 58 வயதுடைய தாய்க்கும் 38 வயதுடைய மகனுக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிப்பதாக கண்டி உயர் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர தெரிவித்தார்.