விபத்தில் யாழைச் சேர்ந்த மொறட்டுவ பல்கலைக்கழக மாணவன் பலி!!

848

download

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவர் விபத்தில் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவனான அமில்தன் மகேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மாணவர்கள் பயணம் செய்த மோட்டார்வண்டி, ஜீப் வண்டியுடன் மோதியதாலேயே இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் வண்டியில் சென்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.