நடிகர் சங்கத் தேர்தலில் திடீர் வன்முறை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இருப்பு கம்பியால் தாக்குதலுக்குள்ளான விஷால் மயக்கமுற்றதாகவும் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரை சரத்குமாரின் உதவியாளராக கூறப்படும் கிச்சா என்பவர் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. காலை முதல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வந்தது. இந்நிலையில், பகல் 12 மணியளவில் திடீரென வாக்குச்சாவடி அருகே சலசலப்பு ஏற்பட்டது.
நடிகர், நடிகைகளும் வாக்குச்சாவடியை நோக்கி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், செய்தியாளர்களை உள்ளே விட பொலிசார் அனுமதிக்கவில்லை.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில், ‘விஷால் தாக்கப்பட்டதாகவும், சரத் அணிக்கும், விஷால் அணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பிரச்சினைக்குக் காரணமாக கூறப்படுவதாவது:
நடிகை சங்கீதா வாக்களிக்க வந்தபோது அவரை சரத்குமார் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து விஷால் தட்டிக் கேட்டதாகவும், அப்போது சரத்குமாரின் அருகே இருந்த அவரது உதவியாளரான கிச்சா என்பவர் தாக்கி விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
தாக்குதலில் விஷால் மயங்கி விழுந்ததாகவும், பின்னர் அவரே வெளியேறி வந்ததாகவும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.