வவுனியாவில் இருவேறு இடங்களில் கத்தி முனையில் துணிகர திருட்டு!!

466

Kollai

வவுனியாவில் சனிக்கிழமை இரவு இருவேறு இடங்களில் கத்தி முனையில் துணிகர திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,

வவுனியா, தட்சங்குளம் பகுதியில் சனிக்கிழமை இரவு உட்புகுந்த ஐந்து, ஆறு பேர் அடங்கிய குழுவொன்று கத்தி முனையில் அவ்வீட்டில் இருந்த மற்றும் வீட்டு இருந்தவர்கள் அணிந்திருந்த சங்கிலி, காப்பு, காதணி உள்ளிட்ட 6 பவுண் நகைகளை திருடிக் கொண்டு சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, பூந்தோட்டம் பகுதியில் வீட்டு உரிமையாளர் வெளியில் சென்றமையால் பூட்டப்பட்டிருந்த வீடு உடைக்கப்பட்டு சுமார் ஒன்றரைலட்சம் மூபாய் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



இத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.