கோடகவெல – மல்வத்தை பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பாகன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (18.10) காலை யானைக்கு உணவு வைக்கச் சென்ற வேளையே இவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பின்னர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையே அவர் பலியாகியுள்ளார்.
மேலும் 50 வயதான இவர் கடந்த 30 வருடங்களாக யானைப் பாகனாக இருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.