பேஸ்புக்கிலுள்ள பழைய விஷயங்களை மறைப்பது எப்படி?

373

Fb

நம் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான விஷயங்களை மட்டுமல்லாது அவ்வப்போது, நமக்கு கோபத்தையோ, சோகத்தையோ ஏற்படுத்திய சம்பவங்களையும் உலகோடு பகிர்ந்துகொள்ள நாம் பேஸ்புக் போன்ற இணையதளங்களை நாடுகின்றோம்.

பிரிந்துபோன காதலி/காதலனுடன் மகிழ்ந்த நிமிடங்களை என்றைக்கோ பதிவு செய்திருந்ததை, பிரிந்து வேறு ஒருவரை மணமுடித்த பின்னர் பல ஆண்டுகள் கழித்து திடீரென பேஸ்புக் ஞாபகப்படுத்தினால்..

இதுபோன்ற சோதனையான சூழ்நிலைகளுக்கு நாம் தள்ளப்படாமலிருக்க www.facebook.com/onthisday.. இந்த பக்கத்திற்குச் சென்று நோட்டிபிகேஷன் பொத்தானை அழுத்தி, அதில் வேண்டிய மாற்றத்தை செய்துகொள்ளலாம்.

இதேபோல, நியூஸ்ஃபீட் பக்கத்திலும் நீங்கள் யாருடைய கருத்துக்களைப் பார்க்க விரும்புகின்றீர்களோ அதற்கேற்ப ‘பிரிபரன்ஸ்’ பொத்தானை அழுத்தி மாற்றம் செய்துகொள்ளலாம்.