இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் இன்று பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவர் ஷசாங்க் மனோகர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நிலைமை என்ன என்பதை தீர்மானிக்கும் கூட்டம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியது.
ஆனால், இரண்டு அணியையும் வெட்டிவிட பி.சி.சி.ஐ. விரும்பவில்லை. அந்த இரண்டு அணிகளும் அடுத்த இரண்டு சீசனில் இடம்பெறாது. அதற்குப் பதில் இரண்டு புதிய இரண்டு அணிகள் 2016, 2017-ல் கலந்து கொள்ளும்.
2018-ல் 8 அணியில் இருந்து 10 அணிகளாக எண்ணிக்கை உயர்த்தப்படும். அதில் இரண்டு அணிகளும் இடம்பெறும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.