ஜேர்மனியில் பனிப்பொழிவு ஆரம்பம் : மகிழ்ச்சியில் மக்கள்!!

633

Germany

ஜேர்­ம­னியில் பனிப்­பொ­ழிவு தொடங்­கி­யுள்­ளதால் குழந்­தைகள் முதல் பெரி­ய­வர்கள் வரை மகிழ்ச்சி அடைந்­துள்­ளனர்.

ஜேர்­ம­னியில் வெப்­ப­நிலை அதி­க­மாக காண ப்­பட்­டி­ருந்த நிலையில், தற்­போது பெரும்­பா­லான பகு­தி­களில் பனி­மழை பெய்து வரு­கி­றது. இதனால், நெடுஞ்­சா­லைகள், விமான ஓடுதளங்கள், வீடு­களின் கூரைப் பகுதி என அனைத்து இடங்­களும் வெள்ளை நிறத்தில் காட்­சி­ய­ளிக்­கின்­றன.

ஜேர்­ம­னியின் மத்­திய மற்றும் கிழக்கு பகு­தி­களில் சில இடங்­களில் 10செ.மீ அள­விற்கு பனி­மழை பெய்­துள்­ளது. இதனால், 4 டிகிரி செல்­சியஸ் அள­விற்கு வெப்­ப­நிலை பதி­வா­கி­யுள்­ள­தாக அந்த நாட்டுத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

வீதிகள் மற்றும் கார்­களில் படர்ந்­துள்ள பனி­களை அப்­பு­றப்­ப­டுத்தும் பணிகள் நடை­பெற்று வருகின்றன. விபத்­துக்­களை தவிர்ப்­ப­தற்­காக வீதி­களில் கார் ஓட்டும் போது மெது­வாக செல்­லு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

மேலும், எதிர்வரும் நாட்­களில் பனிப்­பொ­ழிவு அதி­க­ரிக்கும் என்று அந்­நாட்டு வானிலை மையம் தெரி­வித்­துள்­ளது. இருப்­பினும், இந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு என்ப தால் ஜேர்மனி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.