
ஜேர்மனியில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜேர்மனியில் வெப்பநிலை அதிகமாக காண ப்பட்டிருந்த நிலையில், தற்போது பெரும்பாலான பகுதிகளில் பனிமழை பெய்து வருகிறது. இதனால், நெடுஞ்சாலைகள், விமான ஓடுதளங்கள், வீடுகளின் கூரைப் பகுதி என அனைத்து இடங்களும் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கின்றன.
ஜேர்மனியின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் சில இடங்களில் 10செ.மீ அளவிற்கு பனிமழை பெய்துள்ளது. இதனால், 4 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீதிகள் மற்றும் கார்களில் படர்ந்துள்ள பனிகளை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்துக்களை தவிர்ப்பதற்காக வீதிகளில் கார் ஓட்டும் போது மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் நாட்களில் பனிப்பொழிவு அதிகரிக்கும் என்று அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு என்ப தால் ஜேர்மனி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.





