17.10.2015 அன்று வினாயகபுரம் மல்லாவியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய வைத்திய கலாநிதி சி.சிவமோகன் பேரினவாத சிந்தனைகள் தமிழ்அரசியல் கைதிகள் விடயத்தில் இருக்கக்கூடாது. என்று தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் பல்லாயிரக்கணக்கான இலங்கை மக்களை பலியெடுத்த JVP போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கமுடியுமானால் ஏன் விடுதலை புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்ககூடாது. என்றும் சிங்கள தேசம் தனது அடக்குமுறை மேலாதிக்க சிந்தனையை விட்டுவிடப்போவதில்லை என்பது நாம் அறிந்ததே.
தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர்கள் என்னபதற்காகவே இன்று அரசியல் கைதிகளாக பூசா வதைமுகாம் போன்றவற்றில் அடைக்கப்பட்டுள்ளனா. பழைய வரலாற்றின்படி பூசா முகாமானது JVP போராளிகளை அடைக்கவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது ஆனால் இன்று எமது தமிழின போராளிகள் பூசா முகாமில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
எனவே இந்த விடயத்தில் இன்றைய நல்லாட்சி அரசு ஒரு முடிவுக்கு வரவேண்டும். அனைத்து கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாதவிடத்து நல்லிணக்கம் என்பது கேள்விக்குறியே என்று தெரிவித்தார்.





