வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியகராசா அவர்களினால் வ உதைபந்தாட்ட வீரர்களுக்கான பரிசுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது
வடமாகாணசபை உறுப்பினரான மயில்வாகனம் தியகராசா அவர்களினால் வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலய உதைபந்தாட்ட வீரர்களுக்கான பரிசுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது
வடமாகாண சபை உறுப்பினரான திரு.ம.தியாகராசா அவர்கள் தன்னுடைய குறித்து ஒதுக்கப்பட்ட 2015ம் நிதியிலிருந்து வவுனியா தெற்கு வலயத்திற்கு உட்பட்ட உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றி முதலாம் இடம் பெற்ற வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலய மாணவ வீரர்களுக்கு பாதணிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் என்பன வழங்கி வைத்தார்.
இன் நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசா மற்றும் உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் A.M.சுபைர், பாடசாலை அதிபர் M.S.றம்சீன், உபஅதிபர் M.A.சமத் மற்றும் உடற்பசி ஆசிரியர் மா.சாருகாசன் எனப்பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.






