தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி அமோக வெற்றி : முழுமையான விபரம் இணைப்பு!!

620

Nadikar

சென்னையில் இன்று நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசர் அணி வெற்றி பெற்றது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் அறிவித்தார். இதனையடுத்து புதிய தலைவராக நடிகர் நாசர் பொறுப்பேற்கிறார். நாசர் 103 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றிபெற்றார். சரத்குமார் 1,231 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி

நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் 1445 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ராதாரவி 1,138 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். விஷால் 307 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றிபெற்றார்.

பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி வெற்றி

நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசார் 1493 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எஸ்.எஸ்.ஆர் 1,080 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். கார்த்தி 413 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றிபெற்றார்.

துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பொன்வண்ணன் வெற்றி

நடிகர் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கருணாஸ் 1,235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சிம்பு 1,107 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். பொன்வண்ணன் 128 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றிபெற்றார்.

துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கருணாஸ் வெற்றி

நடிகர் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கருணாஸ் 1,362 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். விஜயகுமார் 1,115 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். கருணாஸ் 247 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றிபெற்றார்.

இதன் மூலம் நடிகர் சங்கத்தின் அனைத்து முக்கியப் பொறுப்புகளையும் விஷாலின் பாண்டவர் அணி கைப்பற்றியுள்ளது. 24 செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் இன்று காலைக்குள் தெரிந்துவிடும்