பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியை கடத்தல்!!

1219

Kidnap

இன்று காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த வேளை, உருபோக்க பிரதேசத்தில் வைத்து ஆசிரியை ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

மாரவல பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஆசிரியை ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்த விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.