பாலியல் வன்முறைகளுக்குள்ளான ஆண்களுக்கான உலகின் முதலாவது புரட்சிகர சிகிச்சை நிலையம்!!

742

ab

பாலியல் வன்­மு­றை­க­ளுக்கு உள்­ளான ஆண்­க­ளுக்­கான உலகின் முத­லா­வது புரட்­சி­கர நிலையம் சுவீ­டனில் திறந்து வைக்கப்பட்டுள்­ளது.

நோயா­ளர்­களை பரா­ம­ரிப்­பதில் பாலியல் சமத்­துவம் பின்­பற்­றப்­படு­வதை உறு­திப்­ப­டுத்தும் வகை­யி­லேயே சொடர்ஸ்­ஜு­ஹுஸெட் என்ற மேற்­படி மருத்­து­வ­மனை திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது.

சுவீ­டனில் பாலியல் வன்­மு­றைக்கு உள்­ளான பெண்­க­ளுக்­கான நிலையம் ஏற்­க­னவே திறந்துவைக்­கப்­பட்­டுள்­ளது. அந்த நிலை­யத்தில் வரு­டாந்தம் 600-–700 பேருக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கி­றது.



இந்தப் புதிய மருத்­து­வ­மனையில் பாலியல் பலாத்­காரம் மற்றும் பாலியல் தாக்­கு­த­லுக்கு உள்­ளான ஆண்­க­ளுக்கும் சிறு­வர்­க­ளுக்கும் சிகிச்சை அளிக்­கப்­பட்­வுள்­ள­தாக தெரி­வித்த சுவீடன் லிபரல் கட்­சியின் பேச்­சாளர் ரஸ்முஸ் ஜொன்லன்ட், பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்ட பெண்­க­ளுக்­கான சிகிச்சை நிலை­யத்தைத் தொடர்ந்து ஆண்களுக்கான முதலாவது சிகிச்சை நிலையத்தை திறந்து வைத்துள்ளதையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.