வவுனியாவில் இடம்பெற்ற கல்விப் பொதுச் சாதாரண தரப் பரீட்சைக்கான கருத்தரங்கின் போது மாணவர் குழுக்கள் மோதிக் கொண்ட சம்பவம் ஒன்று கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இவ்வருடம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுச்சாதாரண தரப்பரீட்சையில் தோற்றும் வவுனியா நகரம் மற்றும் அதனையண்டிய பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாட கருத்தரங்கு கடந்த சனிக்கிழமை வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.
இதன்போது சில மாணவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடு கருத்தரங்கின் சிறிய இடைவேளையின் போது கைகலப்பாக மாறியது. இதனையடுத்து மாணவர்கள் பாடசாலைகளாக பிரிந்து மோதலில் ஈடுபட்டனர்.
இதன்போது இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் அலங்காரத்திற்காக வளர்க்கப்பட்ட பூங்கன்றுகள், புற்தரைகள் என்பனவும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.