மழையுடனான காலநிலையை இன்றும் எதிர்பார்க்கலாம் என, வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. பிற்பகல் 02.00 மணிக்கு பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 9 மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆய்வு நிலையத்தால் விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 07.30முதல் இன்று இரவு 07.30 வரையான 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடுபிலி குறிப்பிட்டுள்ளார்.