கடுகன்னாவ பிரதேசத்தில், சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டிருந்த, ஒருதொகை சிகரட்டுக்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
187,000 சிகரட்டுகளுடன் பயணித்துக் கொண்டிருந்த லொறியொன்றை இன்று மாலை கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சிகரட்டுக்களின் பெறுமதி சுமார் 50 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.