கனடா பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி அமோக வெற்றி!!

750

Canada

கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான லிபரல் கட்சி அமோக வெற்றிபெற்றுள்ளது.

மனிதவுரிமை ஆர்வலருமான சட்டத்தரணி ஹரி ஆனந்தசங்கரி ஸ்காபரோ ஷரூச்பார்க் இத்தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார்.

இதேவேளை புதிய சனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் இத் தேர்தலில் சில ஆயிரம் வாக்குகளால் தோல்வியைத் தழுவியுள்ளார்.



இதன் மூலம் 9 ஆண்டுகால கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி முடிவுக்குவந்துள்ளதுடன், ஜஸ்டின் ட்ருதா தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சியமைக்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றுள்ளது.