போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாக கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதாவின் சகோதரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.போருல்லே பகுதியில் வைத்து இவர் உள்ளிட்ட மூவர் 111 கிராம் 540 மில்லி கிராம் போதைப் பொருளுடன் கைதாகியுள்ளனர்.
சந்தேகநபர்கள் வசம் இருந்து பல்வேறுபட்ட போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். போருல்ல பகுதியிலுள்ள மூன்று வெவ்வேறு இடங்களில் வைத்து நேற்று பகல் மற்றும் மாலை இவர்கள் கைதாகியுள்ளனர்.