பதவிய – ருவன்புர பகுதியில் பாடசாலை மாணவிகள் எட்டுப் பேரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புலமைப் பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளை நடத்தி வரும் இவர் 26 வயதான பட்டதாரியாவார். மேலும் சம்பவத்தில் 09 – 10 வயது மதிக்கத்தக்க மாணவிகளே பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இவர் கைதாகியுள்ளனர். சந்தேகநபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.