ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட முச்சக்கர வண்டி சாரதி ஒருவர், 300 பெண்களுக்கு தனது நோயைப் பரப்பிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே மூன்று முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற 31 வயதுடைய குறித்த முச்சக்கர வண்டி சாரதிக்கு, ஏராளமான பெண்களுடன் தகாத தொடர்பு இருந்துள்ளது. அண்மையில் இவரை, நண்பரின் வீட்டில் திருடியதாக கூறி பொலிசார் கைது செய்து விசாரித்தபோது, இந்த உண்மைகள் தெரியவந்ததுள்ளன.
இவர் விலைமாதர்களைத் தேடி உறவு கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அத்துடன் தனது முச்சக்கர வண்டியில் தினமும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் தாய்மார்களையும் தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் அவருக்கு எய்ட்ஸ் நோய் தொற்றி இருப்பது தெரியவந்துள்ளது. எனினும் அவர் பாதுகாப்பில்லாமல் பெண்களுடன் உறவு கொண்டுள்ளார்.இவ்வாறு இவர் சுமார் 300 பெண்களுடன் பாதுகாப்பற்ற முறையில் தொடர்பு வைத்திருந்ததால் அவர்களுக்கும் எச்ஐவி நோய் தொற்றியிருக்கலாம் என தெரிகிறது.
இந்நிலையில், திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அவர், தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.